சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிராவில் முதல் ஜாக்பாட் பரிசுத் தொகை S$10 மில்லியனாக இருக்கும் என்று Singapore Pools தெரிவித்துள்ளது.
அதற்கான குலுக்கல் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9:30 மணிக்கு நடைபெறும் என்றும் அது கூறியுள்ளது.
Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?
கடந்த ஏப்ரல் 17, ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் நடந்த கடைசி மூன்று குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் அதன் பரிசுத் தொகை தற்போது S$10 மில்லியனாக அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் அந்த மெகா குலுக்கலில் ஆர்வமுள்ள நபர்கள் வரும் ஏப்ரல் 28 அன்று இரவு 9 மணிக்குள் டிக்கெட்டுகளை வாங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமான மாலை 6 மணிக்கு முடியும் குலுக்கல், இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படும்.
டோட்டோ லாட்டரி விதிகளின்படி; ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் மெகா குலுக்களிலும் யாரும் வெற்றிபெறவில்லை என்றால், இரண்டாவதாக வரும் வெற்றியாளர்களிடையே அந்த பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும்.
இதற்கு முன்பாக இதுபோன்ற உச்சத்தை அடைந்த முதல் பரிசுத் தொகை குலுக்கல்கள் ஜனவரி 3 (S$11.7 மில்லியன்), ஜனவரி 24 (S$13.3 மில்லியன்) மற்றும் பிப்ரவரி 7 (S$12.6 மில்லியன்) ஆகிய தேதிகளில் நடந்தன.
ஒர்க் பெர்மிட் (Work permit) வேலைவாய்ப்புகள்: Class 4 – 5 ஓட்டுநர்கள், சமையல்காரர்கள்
Top Image: Google Map