சிங்கப்பூர் டோட்டோ (TOTO) மீண்டும் S$10 மில்லியன் என்ற பிரம்மாண்ட முதல் பரிசை அறிவித்துள்ளது.
இன்று (ஜூலை 17) வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) தெரிவித்துள்ளது.
MRT ரயிலில் தலைக்குப்புறக் கிடக்கும் ஆடவர்.. “வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா” – நெட்டிசன்கள் கவலை
இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?
இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா என்ற கேள்வி நம்மிடம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
இந்தியாவில் இருந்துகொண்டு யாராலும் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் TOTO லாட்டரி டிக்கெட்டை வாங்க முடியாது.
TOTO என்பது சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி ஆகும்.
ஆன்லைன் மற்றும் மொபைல் வழியாக யார் டிக்கெட் வாங்கலாம்?
சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூர் அடையாள அட்டை (NRIC) அல்லது வெளிநாட்டு அடையாள எண் (FIN) கொண்டவர்கள்.
சிங்கப்பூர் குடிமகன், நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூரில் வசிக்க அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள்.
21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
இந்தியாவில் இருந்து வாங்க முடியுமா?
சிங்கப்பூர் NRIC அல்லது FIN இல்லையெனில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் பூல்ஸ் தளத்தில் பதிவு செய்ய முடியாது.
சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட கணக்கு (Singapore‑registered account) இல்லாவிட்டால், கைபேசி அல்லது eBetslip வழியாகவும் டிக்கெட்டுகளை வாங்க முடியாது.
இந்திய அந்நிய செலாவணி மேலாண்மை (FEMA) சட்டங்களின்கீழ், லாட்டரி மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது சட்டவிரோதமாக இருக்கலாம்.
அதே போல தமிழ்நாட்டில் லாட்டரி பந்தயங்களுக்கு தடை இருப்பதும் நாம் அறிந்தது தான்.
டோட்டோவில் மீண்டும் “S$10 மில்லியன்” பிரம்மாண்ட முதல் பரிசு – அதிஷ்ட கடைகள் எது?