சிங்கப்பூர் டோட்டோ (TOTO): லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட்டுக்கு S$1.18 மில்லியன் பரிசு விழுந்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
S$12.76 என்ற பிரம்மாண்ட முதல் பரிசு “குரூப் 2 வெற்றியாளர்கள்” 12 பேருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.
நேற்று (ஜூலை 17) நடந்த கேஷ்கேட் ஜாக்பாட் குலுக்களிலும் முதல் பரிசை யாரும் வெல்லாத காரணத்தால் TOTO விதிகளின்படி, மேற்கண்டவாறு பரிசு பிரித்து கொடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO)
சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) அளித்த அதிகாரபூர்வ தகவலின்படி, குரூப் 2 ஒவ்வொரு வெற்றியாளருக்கும் S$1.18 மில்லியன் பங்கு ஒதுங்கும்.
அதில் வெற்றி பெற்ற எண்கள் 7, 8, 17, 29, 32, 42 மற்றும் கூடுதல் எண் 1 ஆகும்.
குரூப் 3 பரிசு
அதே போல, குரூப் 3 பரிசுகளை 609 பேர் பிரித்து கொள்கின்றனர்.
அதில் ஒவ்வொரு நபருக்கும் S$1,658 வரை பரிசுத் தொகை ஒதுங்கும் என சிங்கப்பூர் பூல்ஸ் கூறியுள்ளது.
MRT ரயிலில் தலைக்குப்புறக் கிடக்கும் ஆடவர்.. “வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா” – நெட்டிசன்கள் கவலை

குரூப் 2 இரண்டாம் பரிசுகளை வென்ற டிக்கெட்டுகள் வாங்கப்பட்ட முக்கிய இடங்கள்:
தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 21 இல் உள்ள லீ இங் டிரேடிங் ஸ்டோரில் 1 QuickPick Ordinary Entry மூலம் டிக்கெட் வாங்கப்பட்டது.
அதே போல, லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள ரங்கூன் ப்ரொவிஷன் கடையில் 1 QuickPick Ordinary Entry மூலம் வாங்கப்பட்ட டிக்கெட் பரிசை தட்டித் தூக்கியது.
Images: 小辣椒在新加坡 & long boon siong/Xiaohongshu