ஜோகூர்பாரு,
ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இரண்டு தரப்பினரும் எல்லைத் தொடர்பான போக்குவரத்து சேவைகளில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி, பொதுமக்களின் சுலபமான பயணத்தை உறுதி செய்து, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிடுகின்றனர் என ஜோகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கான அவரது அதிகாரப்பூர்வப் பயணத்தின் மூன்றாவது நாளில், சிங்கப்பூர் அமைச்சர் ஜெஃப்ரி சியாவுடன் நடந்த சந்திப்பில், வரவிருக்கும் Rapid Transit System திட்டத்தின் முன்னேற்றத்தைப் பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், இதன்போது இயக்க நேரம், பயண கட்டணம் மற்றும் இரு நாடுகளின் பொதுப்போக்குவரத்து ஒருங்கிணைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முக்கிய போக்குவரத்து நிறுவனங்களான SBS Transit, Causeway Link, SMRT Buses, Transtar Travel மற்றும் Bas AC7 வழி எல்லைகளில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் எட்டப்பட்டதாகவும், பேருந்துகல் இயக்க நேரத்தை தற்போது 5 மணி காலை முன்னதாக ஆரம்பிப்பது குறித்த பேசப்பட்டதாகவும் எல்லை ஓரத்திலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் எல்லை மினி சேவைகள் (e-hailing) அறிமுகப்படுத்தல் போன்ற பல விவகாரங்கள் பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tuas ferry சேவையின் வழியாக விரிவான மாற்று போக்குவரத்து வசதியை ஆராயும் தனித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள், ஜோகூர் காஸ்வே மற்றும் இரண்டாவது பாலம் மீதான செறிவை குறைத்து பயணிகளுக்கு மேலும் வசதியான, நெகிழ்வான, மற்றும் திறம்பட கூடிய போக்குவரத்து வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.