சிங்கப்பூரில் சாலைகளில் படுத்து உறங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
ஊழியர்கள் அவ்வாறு உறங்கும் போது அதனை காணொளி அல்லது புகைப்படம் எடுத்து சிலர் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
“வாழ வேண்டிய வயசுங்க..” – சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டை இளைஞர் மின்னல் தாக்கி மரணம்
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகள் சிங்கப்பூர் வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறி வருகிறது.
சிலர் மது போதையில் பிளாட்டின் கீழ் தளங்கள், சாலைகள், கார் நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் உறங்குவதாக புகார்கள் எழுகின்றன.
இதனால் வேலை கலப்பில் உறங்கும் ஊழியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக வெளிநாட்டு ஊழியர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள புகைப்படம், தெலோக் பிளாங்காவில் நடைபாதையில் எடுக்கப்பட்டதாக Stomp பகிர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் (நவம்பர் 16) மாலை 4.35 மணிக்கு திலோக் பிளாங்கா டிரைவ் பிளாக் 45ல் உள்ள பிளாங்கா கோர்ட்க்கு வெளியே அவர் காணப்பட்டார் என்று அதன் வாசகர் கூறியுள்ளார்.
“மது போதையில் இருக்கும் ஊழியர்கள் நடைபாதையில் தூங்குகிறார்கள். என்ன ஒரு மோசமான பிம்பம்,” என்று அதன் வாசகர் கூறியுள்ளார்.
சமீப காலமாக இதுபோன்ற பல சம்பவங்கள் சிங்கப்பூரில் ஆங்காங்கே நடைபெறுகிறது, இதனால் அவர்கள் சார்ந்த நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
எனவே ஊழியர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்

