சிங்கப்பூரில் கடந்த 2024 ஆண்டு பலருக்கு குடியுரிமை (Citizenship) மற்றும் நிரந்தரவாசம் (PR) வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளர்களின் தேவை சிங்கப்பூரில் சமீபத்தில் அதிகரித்ததை அடுத்து, அவ்வாறான ஊழியர்கள் பலருக்கு குடியுரிமை அல்லது நிரந்தரவாசம் கிடைத்ததாக துணை பிரதமர் கான் குறிப்பிட்டார்.
அதே போல, சிங்கப்பூருடன் இணங்கும் தன்மை, அவர்களின் பங்களிப்பு மேலும் தொடர்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேலும் பலர் குடியுரிமை பெற்றதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் ஒற்றுமையுடன் தொடர்ந்து பிணைப்பாக செயல்பட, நன்றாக பரிசீலனை செய்த பின்னரே குடியுரிமை வழங்கப்படுவதாக திரு.கான் சுட்டிக்காட்டினார்.
அதே போல, தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதும் இதில் பரிசீலனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் நுழைய தடை.. வேறு பெயரில் வந்து 26 ஆண்டுகள் தங்கி PR, குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்
சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: சிங்கப்பூர், PR ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு?