மெர்லியன் பார்க்கிற்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அக்.30 அன்று உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் அந்த ஆடவரின் உடல் ஆற்றின் கரையோரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
அதன் பின்னர் ஆடவரை சோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்கள் குழு அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததை உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகள் இதில் ஏதும் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சியின் படி, சம்பவம் தொடர்பாக வெளியான காணொளி இரவு 10:40 மணியளவில் எடுக்கப்பட்டது.
காவல்துறை மற்றும் SCDF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு வரை, அந்த உடல் சுமார் 15 நிமிடங்கள் நீரில் மிதந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.
லிட்டில் இந்தியாவில் காவலரை கேலி கிண்டல் செய்த மூவருக்கு அபராதம் – வீடியோ எடுத்தவருக்கும் செக்!

