இந்த கண்காட்சி மரினா பே சாண்ட்சில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வரை நடைபெறுகிறது.
உலகளவில் வளரும் இளம் நகை வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
‘சுற்றுச்சூழலுக்கு உகந்த நகைகள்’ என்ற தலைப்பில் போட்டி நடந்தது.
இந்த கண்காட்சியில் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை மாறியிருக்கும் நகைகள் இடம்பெற்றிருக்கும்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பயிற்சி வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
மேலும் அவர்களுக்கு இத்தாலியில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

