சிங்கப்பூருக்குள் வேலை தேடி சட்டவிரோதமாக நுழைந்த 6 வெளிநாட்டினர் தற்போது பிடிபட்டுள்ளனர்.
23 முதல் 29 வயதுக்குட்பட்ட அந்த ஆறு பேரும் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி (Work permit) ரத்து: சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை
நேற்று (டிசம்பர் 21) நள்ளிரவு சுமார் 12:35 மணியளவில் தானா மேரா கடற்கரையில் அவர்கள் பிடிபட்டதாக கடலோரக் காவல்படை குறிப்பிட்டது.
இந்தோனேசியர்கள்
அவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள் என்றும் மரப்படகில் பயணித்து வந்ததாகவும் கடலோரக் காவல்படையினர் கண்டறிந்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் அவர்களை மடக்கி பிடித்தனர்.
குடிநுழைவு சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த காரணத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலை தேடி
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் ஆறு பேரும் வேலை தேடி சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக தெரியவந்தது.
குடிநுழைவு சட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக இன்று (டிசம்பர் 22) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
தண்டனை
இந்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்
The post சிங்கப்பூருக்குள் வேலை தேடி வந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது appeared first on Tamil Daily Singapore.

