சிங்கப்பூருக்குள் வந்த சுமார் 200 பயணிகளுக்கு பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 14 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.
சிங்கப்பூருக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது கையில் S$20,000 க்கு மேல் ரொக்கம் இருந்தால் அதை அதிகாரிகளிடம் முறையாக அறிவிக்க வேண்டும். அது சிங்கப்பூர் வெள்ளி அல்லது எந்த நாட்டு பணமாக இருந்தாலும் சரி.
துவாஸில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 5 பேர் கைது
அவ்வாறு அறிவிக்காததற்காக அல்லது தவறாக அறிவித்ததற்காக 14 வெளிநாட்டு பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே 21 அன்று, அவர்களில் 26 முதல் 71 வயதுக்குட்பட்ட நான்கு பேர், $20,700 முதல் $380,139 வரையிலான பல்வேறு நாடுகளின் ரொக்கப் பணத்தை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்தபோது பிடிபட்டனர்.
கடந்த மே 21 முதல் மே 27 வரை நடந்த ஒரு வார கால நடவடிக்கையின் போது அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.
அவர்கள் நிலம், கடல் மற்றும் வான் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

