சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஊழியர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் பிப்.1ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள தைப்பூசம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தனது சக நாட்டவரின் உதவியுடன், வேனுக்குள் மறைந்துகொண்டு அவர் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, வரி செலுத்தப்படாத மதுபானம் வைத்திருந்த வழக்கின் தொடர்பிலும் யுஷூனில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக தங்கியிருக்க தேவையான ஆதாரங்கள் அவரிடம் இல்லாத காரணத்தால், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் (ICA) அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை (டிசம்பர் 10) அன்று, 36 வயதான சீன நாட்டை சேர்ந்த நீ பாச்சாவ் என்ற அந்த ஊழியருக்கு ஆறு வார சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
முறையான அனுமதிச் சீட்டு இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: 3 இந்தியர்கள் உட்பட நால்வர் கைது
நீ, 10 நாட்கள் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் சிங்கப்பூருக்குள் நுழைய உதவிய குற்றச்சாட்டை சக நாட்டவரான 28 வயதுமிக்க டோங் எதிர்கொள்கிறார், மேலும் டோங் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டவராக முறையான அனுமதி இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றத்திற்காக, ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, குறைந்தபட்சம் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி

