சிங்கப்பூரில் பகுதிநேர பாதுகாப்பு அதிகாரியின் மரணத்துக்கு காரணமாக இருந்த ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலை தொடர்பான வழிமுறைகளை முறையாக செய்யாத முன்னாள் துப்புரவு ஊழியர் சுரேஷ் குமார் சண்முகத்துக்கு நேற்று (ஜூலை 15) 2 மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டோட்டோவில் மீண்டும் “S$10 மில்லியன்” பிரம்மாண்ட முதல் பரிசு – அதிஷ்ட கடைகள் எது?
ஊழியருக்கு சிறை – என்ன நடந்தது?
ஒன் ராஃபிள்ஸ் பிளேஸில் முகப்பை சுத்தம் செய்ய கொண்டாலா என்னும் மேடையை பயன்படுத்த வேண்டியிருந்தது. அது 63 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மாடி தரையில் 4 மீ ஆழ குழியின்கீழ் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுரேஷ் குமார் சண்முகமும் அவரின் சக ஊழியர்களும், கொண்டாலா வைக்கப்பட்டிருந்த குழியின் மேலே இருந்த இரண்டு தரை மூடிகளை அகற்றினர்.
பொறுப்பை செய்யத் தவறிய சுரேஷ் குமார்
அந்த நேரத்தில் வேலை தொடர்பான வழிமுறைகளை ஊழியர்களுக்கு வழங்கும் பொறுப்பில் சுரேஷ் குமார் இருந்துள்ளார்.
ஆனால், வேலை முடிந்ததும் கொண்டாலா வைக்கப்பட்டிருந்த மூடிகளை மீண்டும் பொருத்த அவர் தவறியதாக சொல்லப்பட்டுள்ளது.
குழிக்குள் விழுந்த பாதுகாப்பு அதிகாரி
2019ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று நடந்த இந்த சம்பவத்தில், பகுதி நேர பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஷான் துங் முன் ஹான் என்ற ஆடவர் அந்த குழிக்குள் விழுந்தார்.
இதனால் திரு. துங்கிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் மேலும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாகவும் துணை மருத்துவர்கள் குழு உறுதி செய்து அறிவித்தனர்.
சிறை
தற்போது வேலையில்லாமல் இருக்கும் 63 வயதான சுரேஷ், அலட்சியமாக செயல்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நேற்று ஜூலை 15 அன்று, இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
DBS/POSB வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்ஸ், தள்ளுபடி, கேஷ்பேக்: எப்படி பெறுவது?

