சிங்கப்பூரில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகமான பனானா லீப் அப்போலோ (Banana Leaf Apolo) உணவகத்தை மூட வேண்டி நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பனானா லீப் அப்போலோ உணவகம், சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சிறப்பு வரலாற்றைக் கொண்ட ஓர் பழமையான உணவகம் ஆகும்.
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/tamil_dailysg/
கடன் வழங்கிய நிறுவனம்
அந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய ஓர் நிறுவனம், உணவகத்தை மூடுவதற்கு வேண்டி விண்ணப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஜூன் 11 அன்று நீதிமன்றத்தில் இந்த மூடல் தொடர்பான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்பம், செராங்கூன் கார்டனில் 7 லிச்ஃபீல்ட் சாலையில் உள்ள கோழி சப்ளை செய்யும் நிறுவனமான தோ தை சான் ஃபார்ம் (Toh Thye San Farm) என்ற கடன் கொடுத்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு விசாரணை
வழக்கை முடித்து வைக்கும் மனு விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பனானா லீப் அப்போலோ நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்கள் அல்லது பங்களிப்பாளர்கள் மூடல் விண்ணப்பத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ விசாரணையில் ஆஜராகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
50 ஆண்டுகாலமாக இயங்கும் பனானா லீப் அப்போலோ
சிங்கப்பூரில் 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பனானா லீப் அப்போலோ உணவகத்தில் இரண்டு கிளைகள் உள்ளன. அவை இரண்டும் இன்னும் இயங்கி வருகின்றன.
அங்கு மீன் தலை குழம்பு தான் தனித்துவமான உணவாகும், பெரும்பாலானோர் அதை சாப்பிடுவதற்காகவே அங்கு செல்வர்.
இந்த உணவகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவில் உணவு பரிமாறும் பாரம்பரிய முறைப்படி வாழை இலைகளில் உணவுகள் பரிமாறப்படுகிறது.
இடைத்தடை
கடந்த 2024 நவம்பரில், ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அதன் கிளை 12 மாதங்களில் 14 குறைபாடு புள்ளிகள் (demerit points) பெற்றதால் அதற்கு இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.