சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கும், லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத உரிமையாளர்களுக்கும் இன்று ஜனவரி 1 முதல் கூடுதல் தண்டனை விதிக்கப்படும்.
அதிவேக ஓட்டுநர்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத உரிமையாளர்களுக்கும் Demerit points என்று சொல்லப்படும் குற்றப் புள்ளிகளும் கூடுதல் அபராதங்களும் இன்று முதல் விதிக்கப்படும்.
TOTO லாட்டரி: புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாக மாற அரிய வாய்ப்பு!
மணிக்கு 20 கிலோமீட்டர் என்ற வேக வரம்பை மீறினால்…
இலகுரக வாகனங்களை ஓட்டுபவர்கள் மணிக்கு 20 கிலோமீட்டர் என்ற வேக வரம்பை மீறினால் அவர்களுக்கு ஆறு குற்றப் புள்ளிகளும் 200 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
இதற்கு முன்னர், இந்த விதிமீறலுக்கு 4 குற்றப் புள்ளிகளும் 150 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
வரம்பை மீறி மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு…
மேலும், வேக வரம்பை மீறி மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 18 குற்றப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இதற்கு முன்னர், இந்த விதிமீறலுக்கு 12 குறைப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கூடுதலாக…
Friendly ஸ்ட்ரீட்ஸ், பள்ளி மற்றும் முதியோர் வட்டாரங்கள், அதிக பாதசாரிகள் நடமாட்டம் உள்ள சாலைகளில் இனி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் “2026 பொது விடுமுறை” நாள்கள்: ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
The post சிங்கப்பூரில் 2026 ஜன.1 முதல் ஓட்டுநர்கள் மற்றும் லாரிகளுக்கு வந்துள்ள மாற்றங்கள் appeared first on Tamil Daily Singapore.

