சிங்கப்பூரில் 2025 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அழிக்கப்பட்டன.
வாக்கின் ரகசியத்தை உறுதி செய்யும் நோக்கில் அவைகள் நேற்று (நவம்பர் 22) தீக்கிரையாக்கப்பட்டன.
மலேசியாவில் தஞ்சாவூரை சேர்ந்த நபர் விபத்தில் சிக்கி மரணம்
சீட்டுகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் உச்ச நீதிமன்ற பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்டு, துவாஸ் சவுத் எரியூட்டும் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதன் பின்னர், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்தல் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உட்பட சாட்சிகளின் முன்னிலையில் அவை அழிக்கப்படுகின்றன.
இது வாக்குகளின் ரகசிய தன்மையை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் ஆவணங்களை அழிக்கும் இந்த நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் சீல் வைக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
அந்த 6 மாத காலத்தில் ஏதேனும் சட்ட சிக்கல் அல்லது தேவை ஏற்பட்டால் ஆதாரத்திற்காக அவைகள் பாதுகாக்கப்படுகின்றன.

