சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்த இரு வெளிநாட்டவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
EP பாஸ் அனுமதி விண்ணப்பங்களில் போலியான கல்வி சான்றிதழ்களை அவர்கள் மனிதவள அமைச்சகத்திடம் (MOM) சமர்பித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
ஜாக்பாட் TOTO பரிசு – இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?
சிங்கப்பூரில் வேலை வாங்க பலே திட்டம்
அதிக சம்பளம் வாங்கியதாக பொய் சொன்னதற்காகவும், முன்பு வேலை செய்தது தொடர்பில் போலியான சான்றிதழை சமர்ப்பித்ததற்காகவும் ஒருவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்தன.
சம்பள அறிவிப்பை பொறுத்தே சிங்கப்பூரில் EP பாஸ் அனுமதி வழங்கப்படுகிறது என்பது அறிந்ததே.
போதுமான சம்பளம் பெறவில்லை என்னும் பட்சத்தில் அவர்களின் EP அனுமதி விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டிருக்கும்.
சிறை
அவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்றும் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
29 வயதான கோனோல் அல்மிரா என்ற பெண்ணுக்கு ஆறு வார சிறைத்தண்டனையும், 29 வயதான டோரஸ் அலிசா ரிவா என்ற பெண்ணுக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 15 மாதங்கள் அல்மிரா பணியாற்றியதாகவும், அவர் மாதந்தோறும் S$2,200 ரொக்கமாகப் பெற்றார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வேலைவாய்ப்பு சட்டம்
EP பாஸ் அனுமதி விண்ணப்பத்தில் போலியான தகவல்களைச் சமர்ப்பித்தால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு