Singapore Tamil Workers: சிங்கப்பூரில் வேலை பார்த்துவரும் ஊழியரின் மனைவி சொந்த ஊரில் பிள்ளையுடன் தானும் உயிரை மாய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பூவரசங்குடி எனும் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார், இவர் சிங்கப்பூரில் கடந்த எட்டு மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்
இவருக்கு திருமணமாகி ஸ்ரீகா (24) என்ற மனைவியும், தன்ஷிகா என்ற இரண்டரை வயது பிள்ளையும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மே 31 ஆம் தேதி ஸ்ரீகா தனது வீட்டில் தற்கொ*லை செய்துகொண்டார் என்றும், வாசல்படியில் அவர்களது பிள்ளை தன்ஷிகா இறந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்க வாசிகள் அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய வேண்டி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சில உறுதிசெய்யப்படாத உண்மைகள் வெளியாகின.
அதாவது இணைய வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 70 ஆயிரம் பணத்தை ஸ்ரீகா இழந்ததாகவும் இதனால் விரக்தியில் பிள்ளையை கொன்றுவிட்டு, தானும் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக்கொண்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுவதாக போலீசார் கூறினர்.
“சிங்கப்பூர் வருவோர் இத செய்யாதீங்க” – இதற்கும் அபராதம் விதிக்கப்படும்
வேலையிடத்தில் கீழே விழுந்த ஊழியர் பரிதாப மரணம் – குடும்பத்திற்கு உதவிவரும் MOM

