Work Permit: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இன்னொருவரை தமிழ்நாடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பரமக்குடி பகுதி நல்லுக்குறிச்சியை சேர்ந்த தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வரும் 47 வயதான பாரதிராஜா மற்றும் இவரின் நண்பர் செந்தில் குமார் ஆகிய இருவரும் சின்னியாம்பாளையம் பகுதியில் டெலி காலர் அலுவலகத்தை அமைத்து நடத்தி வந்துள்ளனர்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிராவில் முதல் ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன்: ஒரே வெற்றி – லைப் செட்டில்!
இந்த நிலையில், சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி, நாங்களே வேலையை வாங்கி தருகிறோம் என்று 96 பேரை நம்ப வைத்துள்ளனர்.
அதில் குறிப்பாக 46 பேரை கடந்த ஏப்ரல் 1 அன்று தேர்ந்தெடுத்து, சிங்கப்பூரில் வேலை ரெடி என்ற தகவலையும் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அதன் பின்னர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அவர்கள் பணத்தை கட்டியதாகவும், சிங்கப்பூர் வேலை அனுமதி ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த 24 வயதான ஸ்ரீதர் என்பவருக்கு அந்த வேலை அனுமதி ஆணை மீது சந்தேகம் வர அதுபற்றி பாரதிராஜாவிடம் விசாரித்து வேலை வேண்டாம் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, இதுபற்றி ஸ்ரீதர் போலீசில் புகார் அளிக்க, பாரதிராஜாவை அவர்கள் கைது செய்தனர்.
மேலும் பாரதிராஜாவிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட அவரின் நண்பர் செந்தில் குமார் தப்பி ஓட, அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?

