சிங்கப்பூரில் வேலை இருக்கிறதா? என்ற கேள்வியை சிங்கப்பூருடன் தொடர்புடைய அனைவரும் ஒரு தடவையாவது கேட்டிருப்போம். அந்த அளவிற்கு சிங்கப்பூர் வேலை என்றால் பலருக்கு அதிக விருப்பம்.
சிங்கப்பூரை பொறுத்தவரை வேலை அனுமதி PASS வகைகள் நிறைய உள்ளன, பெரும்பாலானோர் ஒர்க் பெர்மிட்டில் இந்தியாவில் இருந்து இங்கு வந்து வேலை செய்கின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு
சிங்கப்பூரில் வேலை
அதில் குறிப்பாக Work permit, Shipyard permit மற்றும் PCM permit ஆகியவை மூலம் அதிகமானோர் இங்கு வேலைக்கு வருகின்றனர்.
இதை பயன்படுத்திக்கொள்ளும் சில ஏஜென்ட்டுகள், இவ்வாறான பெர்மிட்டுகளில் நல்ல வேலை உள்ளது என கூறி அதிக தொகையை ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாக புகார்கள் வருகின்றன.
ஏஜென்ட்கள் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை பெறுவது என்பது கண்டிப்பாக சாத்தியம் இல்லாத ஒன்றுதான் என்று வேலைவாய்ப்பு தரவு விவரங்கள் கூறுகின்றன.
சிங்கப்பூர் வேலை அனுமதி குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்
ஏஜென்ட்டுகளுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு தான் நாம் சிங்கப்பூருக்குள் கால் எடுத்து வைக்க முடியும். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் உள்ளன.
IP Approval
மேற்கண்ட பெர்மிட்டுகளை பொறுத்தவரை IP அனுமதி (Approval) வந்துவிட்டது என்றால் மொத்த தொகையையும் சில ஏஜென்ட்டுகள் கேட்பதாக கூறப்பட்டுள்ளது.
நமக்கு வேலை கிடைத்துவிட்டது என்ற எண்ணத்தில் சிலர் மொத்த தொகையையும் செலுத்தி விடுகின்றனர், அவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல.
வேலை தேடும் நபர்கள் சிலர் இவ்வாறாக தான் ஏமாற்றப்படுகிறார்கள், அதே போல மேற்கண்ட பெர்மிட்டுகளுக்கு 3 to 4 லட்சம் கூட சிலர் செலுத்துவதாக நம்மிடம் புகார் வந்தது. இந்த அனுமதி வேலைகளுக்கு அவ்வளவு லட்சங்கள் செலுத்துவது என்பது அறிவார்ந்த செயல் கிடையாது.
தங்கும் இட அனுமதி (Housing approval)
IP அனுமதிக்கு பிறகு, தங்கும் இட அனுமதி (Housing approval) மற்றும் On boarding சென்டர் அனுமதி ஆகியவை சிங்கப்பூரில் கட்டாயம்.
இதில் தங்கும் இட அனுமதி கிடைப்பது சாதாரணம் கிடையாது, மேலும் பல மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
அதோடு மட்டுமல்லாமல், தங்கும் இட அனுமதி கிடைக்காமல் காலம் தாமதம் ஏற்படுகிறது என்றால் IP அனுமதி ரத்து செய்யப்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஏஜென்டிடம் முழு தொகையையும் செலுத்திவிட்டு, IP அனுமதி ரத்து செய்யப்பட்டவுடன் தொகையை திருப்பி வாங்குவது என்பது கடினமான ஒன்றாக மாறலாம்.
எனவே, IP வந்தவுடன் குறிப்பிட்ட சிறிய தொகையை முன்பணமாக கொடுப்பது தான் சிறந்தது, அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் சிலர் பெரும்பாலும் இவ்வாறு தான் செய்கின்றனர் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
On boarding சென்டர் அனுமதி
தங்கும் இட அனுமதி அனுமதி கிடைத்தவுடன் ஏஜென்ட் சொன்ன தொகையில் கிட்டத்தட்ட பாதியை நம்பி செலுத்தலாம், ஏனெனில் தங்கும் இட அனுமதி கிடைப்பது தான் அரிது.
அதன் பிறகு, On boarding சென்டர் அனுமதி செயல்முறைகள் இலகுவாக இருக்கும்.
இறுதியாக, On boarding அனுமதி கிடைத்தவுடன் ஏஜென்ட் சொன்ன முழு தொகையையும் நம்பி செலுத்தலாம். (1 to 2 லட்சங்கள் வரை செலுத்துவது சிறந்தது)
ஏனெனில், இந்த அனுமதி வந்துவிட்டது என்றால் நாம் குறித்த தேதியில் சிங்கப்பூரில் இருக்க வேண்டும்.
இணைப்பில் இருங்கள்…