சிங்கப்பூரில் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்ட இரு வெளிநாட்டினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் வீட்டு பணிப்பெண்களாக வேலை பார்க்க வேண்டி சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி (Work permit) ரத்து: சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை
ஆனால், வேலையில் இருக்கும்போது முதலாளிகள் அவர்களுக்கான செலுத்த வேண்டிய தீர்வையை செலுத்த தவறியதால் ரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், அவர்கள் இருவரும் பல ஆண்டுககுக்கு சிங்கப்பூரிலேயே சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவரான 72 வயதாகும் ஃப்ளோர்டெலிசா எம் கோர்டெட்டா என பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண், சிங்கப்பூரில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார் என சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 23 அன்று அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் S$3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற ஃப்ளோர்டெலிசா, சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால், அவரின் முதலாளி வெளிநாட்டு ஊழியர் தீர்வையை செலுத்தத் தவறியதால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு 1991 ஜூலை மாதம் அவரது ஒர்க் பெர்மிட் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
அதை மீறி, நாட்டை விட்டு வெளியேறாமல் கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் அவர் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இறுதியாக, இந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று அவர் ICA ஆணையத்திடம் சரணடைந்தார்.
9 இந்திய ஊழியர்கள் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார்… ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை
சுமார் 16 ஆண்டுகள் சட்டவிரோதமாக தங்கியிருந்த மற்றொரு பணிப்பெண்
49 வயதான ஜோ ஆன் குராபு பால்பின் என்ற மற்றொரு பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணும், சுமார் 16 ஆண்டுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கி இருந்துள்ளார்.
இவரும் கடந்த டிசம்பர் 23 அன்று குடிநுழைவு சட்டங்களை மீறியயதாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும்,S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜோ, 2009 ஏப்ரல் மாதம் ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்றார், இவரது முதலாளியும் தீர்வை செலுத்தத் தவறியதால், அதே 2009 ஆண்டு இவரின் வேலை அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 4 அன்று ஜோ ICA அதிகாரிகளிடம் சரணைந்தார்.
ஜோ விசா காலம் முடிந்த பிறகும், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.
கடும் குற்றம்
விசா அனுமதி முடிந்தும் சட்டவிரோதமாக அதிக காலம் தங்குவது கடும் குற்றம் என்றும், அதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் ICA தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமாக அதிக காலம் தங்கி இருப்பவர்கள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் ICA ஊக்குவித்துள்ளது.
சட்டம்
அனுமதி காலம் முடிந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரை சிறை, S$6,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்

