சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியருக்கு கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் துப்புரவு வேலைபார்க்கும் போது, 10 வயது சிறுமியை ஒரே நாளில் இரண்டு முறை மானபங்கம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூரில் அதிகரிக்கும் COVID-19 தொற்று – பொதுமக்களுக்கு MOH வெளியிட்ட முக்கிய அப்டேட்
அதில் ஒரு முறை, சிறுமி பள்ளித் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சிறுமியிடம் தைரியமாக தகாத முறையில் நடந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நோக்கத்திற்காக நீதிமன்ற ஆவணங்களில் ஊழியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இரண்டு மானபங்க குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் அவர்.
இந்நிலையில், இன்று (மே 14) அவருக்கு 11 மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிறுமி ஆசிரியரிடம் கூறினார், அதன் பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஊழியர் 50 வயதை தாண்டியதால் பிரம்படி விதிக்கப்பட மாட்டாது.

