சிங்கப்பூரில் சட்டவிரோத ஓட்டுநர்களாக பணியாற்றியதாக சொல்லப்படும் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் முழுவதும் கடந்த சில வாரங்களாக சுமார் 375 உணவு விநியோக ஊழியர்களிடம் சோதனைககள் நடத்தப்பட்டன, இந்த அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
3 டிப்பர் லாரி, டேங்கர் லாரி மோதி விபத்து: ஓட்டுனர்களுக்கு காயம்
இதனை போக்குவரத்துத் துறையின் மூத்த துணை அமைச்சரான சன் சூலிங் மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சரான கோ போ கூன் ஆகியோர் அறிவித்தனர்.
புகார்களின் அடிப்படையில் சோதனை
சன் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, “தீவு முழுவதும் உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் மேற்கொண்டது” என்றார்.
சட்டவிரோத ஓட்டுநர்கள் வழக்கமாக கூடும் முக்கிய இடங்கள் குறித்த புகார்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
மேலும், கைதான வெளிநாட்டினரை சட்டவிரோத ஓட்டுநர் வேலைகளை செய்யத் தூண்டிய உள்ளூர்வாசிகளையும் விசாரித்து வருவதாக சன் கூறினார்.
சட்டம்
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகள் மட்டுமே சிங்கப்பூரில் உணவு விநியோக ஓட்டுநர்களாகப் பணியாற்ற முடியும் என்பது சட்டம்.
வேலை அனுமதிகள் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு S$20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வெளிநாட்டினர்களுக்கு விநியோக கணக்குகளைப் பயன்படுத்த உதவி செய்யும் உள்ளூர் வாசிகளும் அதே தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
சட்டவிரோத வேலைகளை செய்து பிடிபடும் வெளிநாட்டினரும் சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை செய்யப்படலாம்.
சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்

