சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர்களில் மிக சிறந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதில் ஒருவரான “சுப்பிரமணியன் வீரமணி” என்ற வெளிநாட்டு ஊழியர் சிங்கப்பூரை கட்டியெழுப்ப உதவியதாக MWC பெருமையுடன் கூறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் சேர்ந்த இந்திய நாட்டவரான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (26), தனது சக ஊழியர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்தி வருகிறார்.
மேலும் சக ஊழியர்களின் கருத்துக்களை தொடர்ந்து சேகரித்து, அதனை மதிப்பாய்வு செய்து நிர்வாகத்திற்குத் தெரிவிக்கிறார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களுடனும் இணக்கமாகவும், அவர்களுக்கு வேலையிட விதிகள் அல்லது கொள்கை மாற்றங்கள் குறித்த வழக்கமான புதுப்பிப்புகளையும் அவர் கூறுவார்.
அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக, சுப்பிரமணியன் ஒவ்வொரு நாளும் தனது வேலையிடத்திற்கு சீக்கிரமாக வந்து தேவையான பங்களிப்பை செய்து வேலைகளை ஒழுங்கமைப்பார்.
“இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையாகவும் கவுரமாகவும் உணர்கிறேன். இது எனது கடின உழைப்புக்குக் கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரமாகும். எனது நிறுவனமான ஸ்ட்ரெய்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் எனது சக ஊழியர்கள், மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் அவர்.
“சிங்கப்பூரில் பணிபுரிவது மிகவும் நன்றாக இருக்கிறது. எனது சக ஊழியர்கள் இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நாங்கள் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக ஒன்றாக வேலை செய்கிறோம், ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கிறோம்” என அவர் கூறினார்.
கெலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா – திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
12 வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு விருது
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் ஆக சிறந்த ஊழியர் விருதுகளில் கௌரவிக்கப்பட்ட 12 சிறந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களில் சுப்பிரமணியனும் ஒருவர்.
ஜூன் 8 அன்று நடந்த இந்த விழா, சூன் லீயில் உள்ள MWC பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற MWCயின் மே தின கொண்டாட்டங்களின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
இந்த விருதுகள், ஊழியர்களின் முன்மாதிரி நடத்தை, வேலையிட பங்களிப்பு மற்றும் சமூகத்தில் ஒற்றுமை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுக்க அனுமதி – ஓட்டுனர்கள் பெரும் மகிழ்ச்சி
PHOTO: NTUC
The post சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புக்கு விருது: “தஞ்சை ஊழியருக்கு கௌரவம்” appeared first on Tamil Daily Singapore.

