சிங்கப்பூரில் இரு வெளிநாட்டு பெண்களை சட்டவிரோதமாக தகாத தொழிலில் ஈடுபடுத்தியதாக வெளிநாட்டு பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயதான ஆவுதினா த்விகா ரோசாவுக்கு நேற்று (ஜூலை 4) சுமார் நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுதியில் ச#ண்டை: ஊழியருக்கு சிறை – என்ன நடந்தது?
பெண்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் அவர் மூன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் பரிசீலனையில் உள்ளன.
சமூக வருகைப் பாஸில் சிங்கப்பூர் வருகை
தகாத தொழிலில் ஈடுபடுவதற்காக, ஆவுதினா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக வருகைப் பாஸில் (Social visit pass) சிங்கப்பூருக்கு வந்ததாக நீதிமன்றம் விசாரணையில் தெரியவந்தது.
அந்த தொழிலில் ஈடுபடும் நோக்கில் சிங்கப்பூர் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, ஆவுதினாவை சந்தித்த இன்னொரு இந்தோனேசியப் பெண், தகாத வேலைக்காக சிங்கப்பூர் வர விரும்புவதாகவும், ஆனால் விமான டிக்கெட்டுக்கு பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஆவுதினா சிங்கப்பூர் செல்ல உதவுவதாக கூறினார். அந்த பெண்ணின் டிக்கெட் கட்டணத்தையும் ஆவுதினா பகிர்ந்து கொண்டார்.
இரு வெளிநாட்டு பெண்கள்
மேலும், அந்த தொழிலில் ஆர்வமுள்ள இரண்டாவதாக இன்னொரு பெண்ணின் அறிமுகமும் ஆவுதினாவுக்கு கிடைத்தது.
அந்த இரண்டு ஊழியர்களும் 2024 அக்டோபர் மாத இறுதியில் சிங்கப்பூர் வந்தனர்.
பின்னர், ஆவுதினா சிங்கப்பூரில் வாட்ஸ்ஆப் குழுமத்தை தொடங்கி அவர்களையும் அதில் இணைத்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர்… சில மணிநேரத்திலேயே ப*லியான சோகச் சம்பவம்!
வலைத்தளத்தில் விளம்பரம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஆவுதினா தனது பாலியல் சேவைகள் தொடர்பாக வலைத்தளத்தில் விளம்பரப்படுத்தியதாகவும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தன்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணை கொடுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் அதை செயல்படுத்தி சுமார் S$2,000 சம்பாதித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வார் என்றும், விலைகளைப் பேரம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இரு பெண்களிடம் இருந்தும் வரும் வருமானத்தில் 30 சதவீதத்தை பெற்றுக்கொள்ள ஆவுதினா ஒப்புக்கொண்டார்.
கணவரிடமிருந்து பிரிந்து வாழும் தன் மகளுக்கு செட்டில்மென்ட் இருப்பதால், ஆவுதினா தண்டனையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்க அனுமதி வழங்கப்பட்டது.