சிங்கப்பூரில் சுமார் 28 ஆண்டுகள் அதாவது 10,268 நாள்கள் விசா காலாவதியாகி தங்கிய (Overstay) வெளிநாட்டவர் தற்போது சரணடைந்தார்.
தற்போது 60 வயதாகும் அவருக்கு நேற்று (செப்.1) ஆறு மாத சிறைத்தண்டனையும் S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் என்னென்ன மாற்றங்கள் / நடவடிக்கைகள்?
அவர் 1995 ஏப்ரல் மாதம் மாணவர் அனுமதி அட்டையை (Student’s pass) பெற்றதாகவும், ஆரம்ப கட்டத்தில் அதை தொடர்ந்து புதுப்பித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 1996 செப்டம்பரில் அவரின் அனுமதி காலாவதியான பிறகும், அவர் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே தங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் 1996 அக்டோபரில், போதைப்பொருள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார், இதனால் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததால் அதன் முடிவு வரும் வரை, அக்டோபர் 17, 1996 அன்று சிறப்பு அனுமதி ஒன்றை ICA அவருக்கு வழங்கியது.
அந்த சிறப்பு அனுமதியில் இருக்கும்போது, ICA வுக்கு அறிக்கை அளிக்கத் தவறிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் அதே ஆண்டு நவம்பரில் அவரது சிறப்பு அனுமதியும் காலாவதியானது, ஆனால் அவர் தலைமறைவு ஆனார் என கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகைகளின்படி, 1996இல் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி காலாவதியான பிறகு, 1996 நவம்பர் 20 முதல் 2024 டிசம்பர் 30 வரை, மொத்தம் 10,268 நாள்கள், அதாவது 28 ஆண்டுகள், ஒரு மாதம், 11 நாட்கள் அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்துள்ளார்.
சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்கியிருந்த சம்பவமாக இது இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, அவர் சொந்த நாடான சீனாவுக்குத் திரும்ப விரும்பியதால், டிசம்பர் 30, 2024 அன்று ICAவிடம் சரணடைய முடிவு செய்ததாகவும் சீனா ஊடகம் தெரிவித்துள்ளது.
நேற்று செப். 1 ஆம் தேதி அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீதிமன்றத்துக்கு வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தார், இருப்பினும் அவர் வேண்டுமென்றே தான் சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்கி இருந்தார் என நீதிபதி கூறினார்.
இந்நிலையில், ஆறு மாத சிறைத்தண்டனையும் S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: செப்.1 முதல் வரும் மாற்றங்கள் என்ன?

