The post சிங்கப்பூரில் லோயாங் அவென்யூவில் பேருந்தும்,லாரியும் மோதி விபத்து!! appeared first on SG Tamilan.
சிங்கப்பூரில் லோயாங் அவென்யூவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் ஜூலை 20-ஆம் தேதி அன்று காலை நிகழ்ந்தது.
லோயாங் அவென்யூ வழியாக டெலோக் பாகு சாலையை நோக்கி செல்லும் வழியில் நடந்தது.
இச்சம்பவம் குறித்து காலை 6.35 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
லாரியில் பயணித்த 13 பயணிகளும்,ஒரு பேருந்து பயணியும் சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
லாரியில் பயணித்தவர்கள் 29 மற்றும் 50 வயதுக்குட்பட்டவர்கள்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பேருந்து பயணிக்கு 50 வயது.
7 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கும், மீதமுள்ள 7 பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து காலை 6.40 மணியளவில் தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.
மேலும் இந்த விபத்தின் வீடியோ singapore Roads Accident.com என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
பேருந்தின் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg
The post சிங்கப்பூரில் லோயாங் அவென்யூவில் பேருந்தும்,லாரியும் மோதி விபத்து!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin