சிங்கப்பூரில் போ**ப்பொருள் கடத்தல் செய்த ஆடவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அதிபர் கருணையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் கருணை மன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை (ஆக. 14) அந்த ஆடவருக்கு மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டது.
33 வயதான டிரிஸ்டன் டான் யி ரூய் என்ற அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, சுமார் 337.6 கிராமுக்குக் குறையாத கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் செய்த மேல்முறையீட்டிலும் அவரின் குற்றம் மற்றும் மரண தண்டனையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் அதிபர் தர்மன் கருணை மன்னிப்பு வழங்கியதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்தது.
டானுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டப்படி சரியே என்றும் அமைச்சரவை தெரிவித்தது.
இருப்பினும், வழக்கின் குறிப்பிட்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக அவருக்கு கருணை வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று MHA தெரிவித்தது.
அவருக்கும் டானுக்கும் தண்டனை வித்தியாசமாக இருக்கக்கூடாது என்பதற்காக கருணை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது

