சிங்கப்பூரில் தைப்பூசம் திருவிழா 2026 பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரும்பும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: 3 இந்தியர்கள் உட்பட நால்வர் கைது
அதாவது, நேர்த்திக்கடன்களை செலுத்த விரும்புவோர் கட்டாயம் இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதற்கான முன்பதிவு, நாளை (டிசம்பர் 10) காலை 9.15 மணி முதல் தொடங்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள், https://thaipusam.sg என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலிலிருந்து டேங்க் சாலையில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு இந்து பக்தர்கள் ஊர்வலமாக நடந்து செல்வார்கள்.

இந்த ஊர்வலத்தின் போது, தமிழ் கடவுள் முருகனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் காவடிகளை எடுத்துச் செல்வார்கள்.
இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) வெளியிட்ட அறிக்கையின்படி, பால் குடம் அல்லது காவடிகளை எடுத்துச் செல்ல விரும்புவோர் இணையத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி
இணையத்தில் பதிவு செய்தவர்கள் தைப்பூச தினத்தன்று தாங்கள் தேர்வு செய்த நேர அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டும்.
மேலும் தேர்வு செய்த நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதலாக, ஆலயத்திற்குள் நுழைய தங்கள் ரசீதுகளில் உள்ள QR குறியீட்டைக் காட்ட வேண்டும்.
ரத மற்றும் அழகு காவடிகளுக்கான இணைய முன்பதிவுகள் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.15 மணிக்குத் தொடங்கும்.
காவடிகளை சுமந்துச் செல்ல விரும்புவோருக்கு, ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் உள்ள PGP அரங்கில் (PGP Hall Auditorium) சிறப்பு விளக்கக் கூட்டம் நாளை (டிசம்பர் 10)மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து

