சிங்கப்பூரில் செயலற்ற 14 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு தலையீட்டுச் சட்டங்களுக்கு எதிராக தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறியதாக அந்த கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 4 சவப்பெட்டிகள்: உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் – LTA அறிவிப்பு
இதில் ஒரு காலத்தில் சிங்கப்பூரின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்த பாரிசன் சோசியாலிஸ் (Barisan Sosialis) கட்சியில் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் PAP தலைவர் ஓங் எங் குவான் (Ong Eng Guan) 1961ஆம் ஆண்டில் PAP கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் நிறுவிய ஐக்கிய மக்கள் கட்சியின் (United People’s Party) பதிவும் ரத்தாகியுள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (டிச.4) அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்தக் கட்சிகளின் பதிவுகள் நீக்கம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
வெளிநாட்டு தலையீட்டுச் சட்டங்களின்கீழ்; உதாரணமாக, S$10,000 அல்லது அதற்கு மேற்பட்ட நன்கொடைகளைப் பெற்றால் அதுகுறித்து தகவல் கொடுக்க வேண்டும், மேலும் வெளிநாட்டினரிடமிருந்து நன்கொடைகளைப் பெற கூடாது.
மேற்கண்ட காட்சிகள் இச்சட்டத்தின்கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறியதாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறு… அபராதம், வாகனம் ஓட்டத் தடை
PHOTO: National Archives of Singapore

