சிங்கப்பூரில் ஓட்டுநரில்லா பேருந்து (AV) இயக்கப்படுவது புதிதல்ல, ஏனெனில் முன்னர் பாதுகாப்புப் அதிகாரிகளுடன் வாகனங்கள் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டன.
ஆனால் தற்போது, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் (RWS) பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாமல் முழுமையாக ஓட்டுநரில்லா ஷட்டில் பேருந்து சேவையை இயக்க நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பச்சைக்கொடி காட்டியுள்ளது.
சிங்கப்பூர் டோட்டோ: லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட்டுக்கு S$1.18 மில்லியன் பரிசு!
ஓட்டுநரில்லா பேருந்து
ரோபோபஸ் என்று அழைக்கப்படும் இந்த ஓட்டுநரில்லா வாகனங்கள், சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனமான WeRide ஆல் உருவாக்கப்பட்டது.
வாகனத்துக்குள் பாதுகாப்பு அதிகாரி யாரும் இல்லாமல் இயக்கப்படுவது, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முதல் மைல்கல் என்று WeRide நேற்று முன்தினம் ஜூலை 17 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியது.
பேருந்து தொலைதூர இயக்க செயல்பாடுகள் மற்றும் சாலை மதிப்பீடு குறித்த விரிவான சோதனைக்கு பிறகு இந்த அனுமதி ஒப்புதல் கிடைத்துள்ளது.
சோதனை ஓட்டம்
2024 ஜூன் முதல், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் மட்டும் 12 நிமிட நிலையான சுழற்சி வட்டப்பாதை அடிப்படையில் ரோபோபஸ் இயக்கப்பட்டு வருகிறது.
அதாவது, ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் இல்லாமல் அது இயக்கப்பட்டாலும், வண்டிக்குள் அவசர கால நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகாரி இருந்தார்.
இந்த சோதனைக் காலத்தில், ஆயிரக்கணக்கான பயணங்களையும் பல்லாயிரக்கணக்கான பயணிகளையும் அது ஏற்றிச் சென்றது மட்டுமல்லாமல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று WeRide தெரிவித்துள்ளது.
தனி சிறப்புகள் என்ன?
இது ஒளி கண்டறிதல் மற்றும் எல்லை வரம்பை கண்டறியும் தொழில்நுட்பம், கேமராக்கள் மற்றும் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது 200 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள தடைகளையும் 360 டிகிரி பார்வையுடன் கண்டறியும் திறன் கொண்டது என்று அந்நிறுவனம் கூறியது.
பல ஓட்டுனரில்லா வாகனங்களை எதிர்பார்க்கலாம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் பல ஓட்டுனரில்லா வாகனங்களை எதிர்பார்க்கலாம் என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் ஜூன் மாத இறுதியில் கூறினார்.
மேலும், பொங்கோலில் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டின் தொடக்கத்தில் அதற்கான சோதனை ஓட்டம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
MRT ரயிலில் தலைக்குப்புறக் கிடக்கும் ஆடவர்.. “வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா” – நெட்டிசன்கள் கவலை