திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (48), இவர் சென்னை நொளம்பூர் பகுதியில் மீன் கடை நடத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெகன் தன்னுடைய மீன் கடையில் தனியாக இருந்தபோது மர்ம கும்பல் அவரை வெ*டிக் கொ*லை செய்து தப்பியோடியது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை தமிழ்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
இதில் மூளையாக செயல்பட்டதாக சொல்லப்படும் திருவாரூர் பகுதியை சேர்ந்த “சிங்கப்பூர் குமார்” என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கும் அவர் குறித்த லுக் அவுட் அறிவிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் சிங்கப்பூரில் பதுங்கி இருந்த சிங்கப்பூர் குமார் ஒடிஷா புவனேஸ்வர் விமான நிலையம் வந்தபோது பிடிபட்டார்.
இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த நொளம்பூர் போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
குமாரின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர். அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவதால் சிங்கப்பூர் குமார் என்று எல்லோரும் அழைத்தனர்.
கொ*லை செய்யப்பட்ட அமமுக நிர்வாகியான ஜெகனுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ராஜேஷ் என்பவருக்கும் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதில் ராஜேஷ் என்ற நபர் வெ*டி கொ*லை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய ஜெகன் தலைமறைவாகி சென்னையில் மீன் கடை நடத்தி வந்துள்ளார்.
ஜெகனை பழிதீர்க்க சுற்றித்திரிந்த எதிர்தரப்பு, அவர் முகப்பேர் பகுதியில் மீன் கடை நடத்தி வருவதை அறிந்து பல நாள்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இதனை அடுத்து கடையில் ஆள் இல்லா நேரத்தில் மீன் வாங்குவது போல சென்ற கும்பல் ஜெகனை வெ*டி கொ*லை செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் சிங்கப்பூர் குமார் போலீசில் சிக்காமல் இருக்க சிங்கப்பூர் சென்று அங்கேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் போது பிடிபட்டார்.