சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக மனிதவள அமைச்சகம் செய்தியை வெளியிட்டுள்ளது.
வேலையிடத்தில் வேப்பிங் எனப்படும் மின் சிகரெட்டை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
புகையிலை சட்டத்தின்கீழ், சிங்கப்பூரில் மின் சிகரெட் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்பதை மனிதவள அமைச்சகம் நினைவூட்டியது.
மேலும், சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை சட்டத்தை ஊழியர்கள் மீறாமலிருக்க நிறுவனங்கள் தங்கள் சொந்த மனிதவளக் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
அதில் ஒழுங்கு நடவடிக்கையும் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மின் சிகரெட் தடை சட்டத்தை மீறினால், பணிநீக்கம் உட்பட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது.
சிங்கப்பூரில் மின் சிகரெட் புகைப்பவர்களுக்கு S$2000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அதே போல விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்நிலையில், விதிகளை தெளிவுபடுத்தவும், குற்றம் செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிங்கப்பூர் முதலாளிகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!

