சிங்கப்பூரில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த கட்டுமான ஊழியரின் மரணம் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, ஜூரோங் ரீஜியன் பாதைக்கான MRT கட்டுமான தளத்தில் சாரக்கட்டு பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் திரு. ரியாசுல் இஸ்லாம் கதம் என்ற மேற்பார்வையாளர்.
பங்களாதேஷ் நபரை தாக்கிய 5 வெளிநாட்டு நபர்கள் – “S$1,000 பணத்தை தா” – என கேட்டு டார்ச்சர்
அப்போது 46 வயதுமிக்க திரு. ரியாசுல், சுமார் 9மீ உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் என முன்னர் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
பின்னர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார்.
இந்நிலையில், அவரது சக ஊழியர்கள் மற்றும் அறை தோழர்கள் அனைவரும் திரு. ரியாசுல் திடீர் துயர மரணம் குறித்து ஆழ்ந்த வேதனையில் உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் திரு. ரியாசுல் ஒரு மனிதராக மிகவும் சிறந்தவர் என்றும் பிறரிடம் அன்பாக பாசமாக பழகக்கூடியவர் என்றும் அவர்கள் கவலையுடன் கூறினர்.
அவர்கள் ஒன்றாக கூடி திரு. ரியாசுலுக்கு இறுதி அஞ்சலி மற்றும் பிராத்தனை செய்தனர்.
லாரி, மோட்டார் சைக்கிள் மோதல்: 47 வயதுடைய ஊழியர் மருத்துவமனையில் அனுமதி
202 பாண்டன் கார்டன்ஸ் அருகே அன்று மாலை 5:30 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF சொன்னது.
அவர், Leze Construction நிறுவனத்தில் வேலைபார்த்தவர் என்பது கூடுதல் தகவல்.
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த LTA, இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.
லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்த வெளிநாட்டு ஊழியருக்கு S$2,000 அபராதம்

