[ad_1]
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணியாற்றியதாக நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 644 டெலிவரி ஊழியர்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதில் சட்டவிரோதமாக வேலை செய்த வெளிநாட்டு ஊழியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
சட்டவிரோத டெலிவரி ஊழியர்களுக்கு எதிராக மனிதவள அமைச்சகம் (MOM) அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
சமீபத்தில், கூடுதலாக 269 டெலிவரி ஊழியர்களிடம் MOM சோதனை செய்ததாகவும், அதில் செல்லுபடியாகும் முறையான வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் பணிபுரிந்ததற்காக ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டதாகவும் சுகாதாரம் மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், இன்று (செப்.8) ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
அதற்கு முன்னதாக, 375 டெலிவரி ஊழியர்களிடம் சோதனை செய்யப்பட்டு அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே சிங்கப்பூரில் உணவு டெலிவரிப் பணியாளர்களாகப் பணியாற்ற முடியும்.
இது போன்ற சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும், சட்டவிரோதமாக டெலிவரி வேலைகளைச் செய்யும் வெளிநாட்டினர் குறித்து சந்தேகம் இருந்தால் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோ வலியுறுத்தினார்.