[ad_1]
சிங்கப்பூரில் தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது லிட்டில் இந்தியாவில் அமைக்கப்படும் வண்ணமயமான ஒளியூட்டு தான்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஒளியூட்டு நிகழ்வு நேற்று லிட்டில் இந்தியாவில் கோலாகலமாக முறையில் தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒளியூட்டை தொடங்கி வைத்தார்.
Video: https://www.instagram.com/p/DOQ_PIzj-Dr/
ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாசாரமாக எண்ணி, மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியதாக Lisha அதன் FaceBook பக்கத்தில் கூறியுள்ளது.

“ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்” என்ற கரும்பொருளுடன் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒளியூட்டின் அலங்கார வளைவுகள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன, அதோடு சுமார் 6,00,000 வண்ண விளக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு “உற்சவம்” கொண்டாட்டமும் இடம் பெற்றன, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உற்சவம் கலை நிகழ்வை LiSHA ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பார்வையாளர்களுக்கு விருந்தாய் அமைந்த கலைப்படைப்புக்களை சுமார் 800 பங்கேற்பாளர்கள் வழங்கினர்.

இந்த ஒளியூட்டு வரும் நவ.18 வரை பொதுமக்கள் பார்வைக்காக இருக்கும், மிளிரும் வண்ண ஒளிகளை மாலை 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு நேரம் வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
ஒளியூட்டு தொடங்கிய முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.

4D லாட்டரியில் டாப் பரிசை தூக்கிய “9999” – இதுவே முதன்முறை
Photos: Lisha/Facebook