சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை தொடங்கி விட்டதால் பலர் விடுமுறையை கொண்டாடுவதற்காக தற்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் சிங்கப்பூரில் நாணயம் மாற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சிங்கப்பூரில் வழக்கத்தை காட்டிலும் குறிப்பாக விடுமுறை காலத்தில் பணமாற்று வர்த்தகமானது 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக வர்த்தக மேலாளார் ஒருவர் கூறியுள்ளார்,
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆஸ்திரேலியா டாலர், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங் தவிர்த்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் நாணயங்கள் அதிக அளவில் மாற்றப்படுவதாக கூறினார். மேலும் ஆசிய நாடுகளின் பணமதிப்பை விட சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகம் என்றும் கூறியிருந்தார். மேலும் பணத்தின் மதிப்பானது நாளுக்கு நாள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது எனவே தேவை ஏற்படும் பொழுது அதை மாற்றுவது நல்லது என்று கூறினார்.

