சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா இந்து பக்தர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்த ஆண்டுக்கான தீமிதித் திருவிழா வரும் அக்டோபர் 12 ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா
வரும் ஜூலை 28 கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழா, மூன்று மாதங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், சடங்குகள் என களைகட்டும்.
அதனையொட்டி நடைபெறும் ஐந்து முக்கிய சடங்குகளில் பங்கேற்க விரும்பினால் இந்து பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதற்கான இணைய பதிவு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய வழி முன்பதிவு கட்டாயம்
தீமிதித் திருவிழா தொடர்பான எந்தவொரு சடங்குகளுக்கும் கோயிலில் டிக்கெட்டுகள் பெற முடியாது என்று இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) தெரிவித்துள்ளது.
இதில் பூக்குழியில் இறங்குவது, பூக்குழியைச் சுற்றி வருவது, பால்குடம், அங்கபிரதச்சனம் மற்றும் கும்பிடுதண்டம் ஆகிய 5 நேர்த்திக்கடன்களும் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும், இவை அனைத்திற்கும் இணைய வழி முன்பதிவு கட்டாயம்.
மேலும் தகவலுக்கு
மேலும் தகவல் அறிய விரும்புவோர், 6223-4064 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.
இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா?
Photo: Elan Govan/FB