சிங்கப்பூரில் களைகட்டவிருக்கும் தேசிய தின கொண்டாட்டங்கள்..
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2024 பல்வேறு புதிய அம்சங்களுடன் களை கட்டவிருக்கிறது.
தேசிய தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் ப்ரோமன்டோரி @ மரினா பே உள்ளிட்ட பகுதிகளை அலங்கரிக்கின்றன.
ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்கும் முன்னோட்ட நிகழ்விலும், தேசிய தினத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்விலும் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேசிய தினத்தில் நேரடி நிகழ்ச்சிகள்,வான்-கடல் சாகசங்கள் என பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர காத்திருக்கின்றன.

