சிங்கப்பூரில் ஊதியம் சென்ற ஆண்டு நிலவரப்படி வேகமாக வளர்ச்சி கண்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (மே 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் தணிந்ததால், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு ஊதியம் வேகமாக அதிகரித்ததாக அறிக்கையில் MOM குறிப்பிட்டது.
வெளிநாட்டு ஊழியர்களை பதாகைகளுடன் போராட தூண்டி சிக்கிய இருவர்
பணவீக்கத்தை கருத்தில் எடுத்துக்கொண்டு கணக்கிட்டால், 2024ல் ஊதியம் 3.2 சதவீதம் உயர்ந்ததாகவும், அது 2023ல் 0.4 சதவீதமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல, 2023 ஆம் ஆண்டில் 4.8 சதவீதமாக இருந்த பணவீக்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு 2.4 சதவீதமாக இருந்தது.
பணவீக்கத்தை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் கணக்கிட்டால், 2024ம் ஆண்டில் ஊதியம் 5.6 சதவீதமாக அதிகரித்தது, இது 2023ல் பதிவான 5.2 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.
உலகளாவிய அரசியல் பதட்டங்கள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக சில வர்த்தக அபாயங்கள் வரலாம் என்றும் MOM எச்சரித்தது.
ஊதியத்தை அதிகரிக்க திட்டமில்லா நிறுவனங்கள்
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்காலம் குறித்த கணக்கெடுப்பை MOM நடத்தியது, அதில் ஊதியத்தை அதிகரிக்கத் திட்டமிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டதாக சொன்னது.
இதனால் இந்த 2025 ஆம் ஆண்டின் ஊதிய வளர்ச்சி கடந்த 2024 ஆண்டு வளர்ச்சியை விட குறைவாக இருக்கலாம் என்றும் அது கூறியது.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது
The post சிங்கப்பூரில் ஊதியத்தை அதிகரிக்கத் திட்டமில்லா நிறுவனங்கள் – MOM சொன்ன அப்டேட் appeared first on Tamil Daily Singapore.

