சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டு இறுதியில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கிளாஸ் 3, 3A ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இனி LGV, சிறிய பேருந்துகள் ஓட்டலாம்
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது உடல்நலத்திற்கு அவசியம் என்று தொற்று நோய்கள் தடுப்பு அமைப்பு (CDA) வலியுறுத்தியுள்ளது.
மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற தடுக்கக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுரை வழங்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு 4 முதல் ஆறு வாரங்களுக்கு முன்பே சுகாதார மருத்துவமனைக்குச் செல்லுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் தேவையான மருத்துவ ஆலோசனையையும், தேவை இருந்தால் தடுப்பூசி போட்டுகொண்டு பயணங்களின் போது ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளவும் முடியும்.
கடந்த ஆண்டில் மட்டும், சிங்கப்பூரர்கள் ஐவருக்கு மலேரியாவும், 14 பேருக்கு டைபாய்டு காய்ச்சலும் ஏற்பட்டதாக CDA தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்புகள் வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளுக்கு பயணிப்பவர்கள் மலேரியா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.
அதே போல, டைபாய்டு தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.
ஆகவே வெளிநாடு செல்வோர் அலட்சியமாக இருக்காமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 4 நாள் அதிரடி சோதனை: 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது!

