சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி கடத்தி வரப்பட்ட அம்பர் கிரீசை பறிமுதல் செய்த வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர்.
ஏறக்குறைய 2.5 கிலோ எடைகொண்ட அம்பர் கிரீசின் இன்றைய சந்தை மதிப்பு 2.50 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.
கிளாஸ் 3, 3A ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இனி LGV, சிறிய பேருந்துகள் ஓட்டலாம்
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட அவற்றை மன்னார்குடியில் வைத்து விற்க முயன்றபோது அவர்கள் ஐவரும் அதிகாரிகளிடம் சிக்கினர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அவைகள் விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, மாவட்ட வன பொறுப்பு அலுவலர் கிருத்திகா அவர்களின் உத்தரவின்பேரில் இந்த அதிரடி கைது நடந்ததாக தினகரன் செய்தி வெளியிட்டது.
இதில் அம்மாவட்டம் வடூவூர், எளவனூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களை சேர்ந்த 39 வயது முதல் 64 வயதுக்கு உட்பட்ட 5 பேர் சிக்கினர்.
இவர்களிடம் அம்பர் கிரீஸ் எப்படி கிடைத்தது என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 4 நாள் அதிரடி சோதனை: 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது!

