சிங்கப்பூரில் இருந்து சுமார் 2,547 சிவப்பு காதுகள் கொண்ட ஆமைகளை கொண்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஆடவரை பெங்களூரு சுங்கத்துறை கைது செய்தது.
கடந்த ஜூலை 12 அன்று, சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டை சேர்ந்த ஆடவர்
அப்போது, செக்-இன் பையில் 2,547 சிவப்பு காதுகள் கொண்ட ஆமைகளை எடுத்துச் சென்ற 26 வயது ஆடவர் பிடிபட்டார். அவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த வடிவேல் என்பது விசாரணையில் தெரியவந்தது.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அவர் கொண்டுவந்த 2,547 ஆமைகளில் 517 ஆமைகள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்து கிடந்தன.
மேலும், அவர் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகளை எவ்வாறு ஏமாற்றி அதனை கொண்டு வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆமைகளை பெற்றுக்கொண்ட NParks
இந்நிலையில், டெர்ராபின்கள் என்றழைக்கப்படும் சிவப்பு காதுகள் கொண்ட ஆமைகள் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக Mothership-பிடம் NParks கூறியுள்ளது.
அந்த சந்தேக நபரிடம் டெர்ராபின் ஆமைகளுக்கான ஏற்றுமதி அனுமதி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் இந்தியாவின் இறக்குமதிக்கான அனுமதிகளை இந்திய அதிகாரிகளிடம் பெறவில்லை எனவும் தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட ஆமைகள்
இங்கு வந்த ஆமைகள் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்த NParks , அவற்றிற்கு முடிவு கட்டியதாக கூறியுள்ளது.
சால்மோனெல்லா மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் ஒரு நோய் கிருமி.
மேலும் அது பொது சுகாதாரத்துக்கும் மற்றும் மனிதர்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா என்பதால் ஆமைகளை அப்புறப்படுத்தியதாக NParks கூறியது.
சிங்கப்பூர் சட்டம்
சிங்கப்பூரில், சேமித்து வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வழிகளில் விலங்குகளை விடுவது சட்டவிரோதமானது.
தமிழ்நாடு – சிங்கப்பூர் தொடர்புடைய செய்திகள்…
சிங்கப்பூரில் வேலை செய்த தமிழ்நாட்டு தொழிலாளி பரிதாப பலி – நம் சகோதரருக்கு ஆதரவு கரம் நீட்டுங்க