சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஜன.4 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு விமானம் வந்தது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது
அதில் வந்த பயணிகளையும் ஆவணங்களையும் விமான நிலைய குடிநுழைவு பிரிவு உதவி அதிகாரி பிச்சை முத்துக்கண்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 40 வயதுமிகுந்த சத்திய மூர்த்தி என்பவரின் ஆவணங்களை சோதித்ததில் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
அதில் போலியான ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றதும், மேலும் பிறந்த தேதி, முகவரி, பிறந்த இடம், தந்தை பெயர் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகள் – இண்டிகோ அறிவிப்பு

