சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பங்களாதேஷ் ஊழியரின் பிறப்புறுப்பை கட் செய்த பெண்.. மனைவி இருப்பதை மறைத்து பெண்ணுடன் உறவு
அதில் சந்தேகம் இருக்கும் நபர்களை நிறுத்தி வைத்து கூடுதலாக சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 2 பேர் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் வந்தது.
அவர்களின் பேச்சிலும் முன்னுக்கு பின் முரண்பாடு இருந்துள்ளது, இதனை அடுத்து அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதித்தனர், ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.
இதனை அடுத்து, அவர்களை தனியே அழைத்து சென்று ஆடைகளை கலைந்து உள்ளாடைகளுக்குள் பரிசோதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
தங்க கட்டி மற்றும் தங்கப் பசை என இவரிடமிருந்து மொத்தம் 781 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 88 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் வெளிநாடு பயணமாக முதன் முறையாக சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர்.
புது முகங்களை இலக்காக கொண்டு தங்கத்தை கடத்தும் குருவிகளாக இவர்களை கடத்தல் கும்பல் பயன்படுத்தியது தெரியவந்தது.
இவர்கள் முதல் முறையாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களை அனுப்பியது யார் என்ற கோணத்தில் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துவாஸில் மெத்தை, தலையணையில் புகையிலை.. வெளிநாட்டு ஓட்டுநர் கைது