சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் அடங்குவர்.
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் போதை பொருள்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிங்கப்பூரில் “கூலி” – எகிறும் எதிர்பார்ப்பு: திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள், நேரம் விவரம்!
இதனை அடுத்து அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது கிட்டத்தட்ட 7 கிலோ எடைகொண்ட போதை பொருளை அவர்கள் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனுடைய இந்திய மதிப்பு சுமார் ரூ.7 கோடி என கூறுகின்றனர்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு சேர்த்து, வேறொரு கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தடைசெய்யப்பட்ட 20க்கும் மேற்ப்பட்ட சீன தயாரிப்பு ட்ரோன்களை கொண்டு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ட்ரோன்களை பறிமுதல் செய்தனர், அதனுடைய இந்திய மதிப்பு சுமார் ரூ18.67 லட்சம் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: சிங்கப்பூர், PR ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு?
வேலைவாய்ப்பு, சிங்கப்பூர் வட்டார செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Facebook, Instagram, Twitter, ShareChat மற்றும் Telegram பக்கங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

