தமிழ்நாட்டு ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து அரியலூர் பறந்து வந்த முதலாளிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுவாக நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் தங்கள் திருமணத்துக்காக வேண்டி முதலாளிக்கு அழைப்பு கொடுப்பது வழக்கம்.
ஆனால், பெரும்பாலான முதலாளிகள் வாழ்த்து சொல்வதோடு நிறுத்துவிடுவர். சிங்கப்பூரில் உள்ள சில முதலாளிகள் ஊழியர்களின் சொந்த ஊருக்கே வந்த திருமணத்தை நடத்திவைப்பது அவ்வப்போது நடைபெறும்.

அதன் வரிசையில், தற்போது அரியலூர் பகுதியை சேர்ந்த ஊழியர் தனவேல், முதலாளியை தன் திருமணத்துக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதை மனதார ஏற்றுக்கொண்ட முதலாளி, தமிழ்நாட்டுக்கு வந்து ஊழியரின் திருமணத்தை முன்னின்றி நடத்தி வைத்து சிறப்பித்தார்.
முன்னதாக அவர்களுக்கு சாரட்டு வண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, தமிழ் பாரம்பரிய முறைப்படி கௌரவிக்கப்பட்டது.
அவர் திருமண வரவேற்பு மேடையில் ஏறும்போது மின்தடை ஏற்பட்டது, அப்போது மாப்பிள்ளை பெண்ணுக்கு வியர்வை சொட்ட ஆரம்பித்தது.
அதனை கண்ட முதலாளி, தன் கையால் விசிறியைக்கொண்டு விசிறிவிட்ட சம்பவம் அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.
இங்கு வந்தது, திருமணத்தை பார்த்தது, தமிழ் பாரம்பரியம் ஆகியவை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக முதலாளி கூறினார்.
Photos Screenshot from Thanthitv

