சிங்கப்பூரில் பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட பானங்களுக்கு முன்பணமாக S$0.10 காசை கொடுக்கும் திட்டம் அறிமுகமாகவுள்ளது.
திட்டமிட்டபடி, இந்த முன்பணம் செலுத்தும் திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
சிங்கப்பூர் டோட்டோ லாட்டரி: ரூ55.8 கோடி புத்தாண்டு சிறப்பு பரிசை தட்டிச் சென்ற மூவர்!
மீண்டும் அந்த S$0.10 முன்பணத்தை பெற, பாட்டில் மற்றும் டின்களை திருப்பி கொடுக்க வேண்டும்.
இந்த முன்பணம் குளிர்பானத்தின் விலையுடன் சேர்த்து வாங்கப்படும், மீண்டும் காலி பாட்டில் அல்லது டின்னை குறிப்பிட்ட இடங்களில் திரும்ப ஒப்படைக்கும்போது முன்பணம் திருப்பி கொடுக்கப்படும்.
கடந்த ஆண்டே தொடங்கப்படவிருந்த இந்த திட்டம், குளிர்பான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு ஆண்டு காலம் தள்ளிபோடப்பட்டது.
சிங்கப்பூரில் 2026 ஜன.1 முதல் ஓட்டுநர்கள் மற்றும் லாரிகளுக்கு வந்துள்ள மாற்றங்கள்
திட்டத்திற்கு ஏற்ப பாட்டில் மற்றும் டின்களை வடிவமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவனங்கள் முன்வைத்தன, இதனால் ஒரு ஆண்டு காலம் தள்ளிபோடப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், கடைகளின் முன்பணம் பெறக்கூடிய மற்றும் முன்பணம் இல்லாத என இருவகை பாட்டில் மற்றும் டின்களை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரில் “2026 பொது விடுமுறை” நாள்கள்: ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
The post சிங்கப்பூரில் இனி பாட்டில், டின்களை கொடுத்தால் காசு… ஏப்.1 முதல் நடப்புக்கு வரும் திட்டம் appeared first on Tamil Daily Singapore.

