சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்பட்ட சோதனையில் $7 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மின் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த சோதனையின் போது மின்சிகரெட்டுகளை வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்திய குற்றத்திற்காக 2,200க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தகவல் சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மின் சிகரெட்டுகளை பயன்படுத்தும் போது அல்லது வைத்திருக்கும் போது பிடிபட்டால் குற்றவாளிக்கு $2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நடைமுறை மார்ச் முதல் அமலுக்கு வந்துள்ளது.

