சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு இனி தீர்வை கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயண செய்யும் இடம் மற்றும் பயண வகுப்பைப் பொறுத்து டிக்கெட்டுக்கு S$1 முதல் S$41.60 வரை தீர்வை செலுத்த வேண்டியிருக்கும்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் முதல் முதல் விற்கப்படும் விமான டிக்கெட்டுகளுக்கு இந்த தீர்வை கட்டணம் பொருந்தும்.
அதே போல, 2026 அக்டோபர் 1 ஆம் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இந்த தீர்வை பொருந்தும்.
இதனை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) இன்று (நவம்பர் 10) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து செல்லும் விமானங்கள் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டு அதுக்கு ஏற்றார் போல தீர்வை கட்டணம் அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இனி மோசடியில் ஈடுபட்டால் குறைந்தது 6 பிரம்படி – புதிய சட்ட திருத்தம் அமல்
குழு 1: தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு S$1 அல்லது S$4 வரை தீர்வை கட்டணம் இருக்கும்.
குழு 2: வடகிழக்கு ஆசியா, தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு S$2.80 முதல் S$11.20 வரை தீர்வை கட்டணம் இருக்கும்.
குழு 3: ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, பசிபிக் தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு S$6.40 முதல் S$25.60 வரை தீர்வை கட்டணம் இருக்கும்.
குழு 4: அமெரிக்கா கண்டங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு $10.40 அல்லது $41.60 வரை தீர்வை கட்டணம் இருக்கும்.
சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
இந்திய பயணிகள் குழு இரண்டில் இடம் பெறுவர்.
இதில் எகானமி பிரிவு டிக்கெட்டுகளுக்கு S$2.80 மற்றும் பிரீமியம் பிரிவு டிக்கெட்டுகளுக்கு S$11.20 தீர்வை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளும் குழு இரண்டில் அடங்கும்.
திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகள் – இண்டிகோ அறிவிப்பு

