கோலாலம்பூர்:
சிங்கப்பூரின் கோவிட்-19 பாதிப்பு நிலைமையை சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோவிட்-19 சம்பவங்கள் சிங்கப்பூரில் இருமடங்காகியுள்ளன. இதனால் மக்களை மீண்டும் முகக்கவசம் அணியுமாறு அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் மே 12 முதல் 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 1,230 கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதாகவும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 14.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், தற்போது மலேசியாவில் பதிவாகிவரும் கொவிட்-19 சம்பவங்கள், ஓமிக்ரான் கிருமித் திரிபையும் அதன் துணைத்திரிபுகளையும் சார்ந்தவை என்றும் அவர் சொன்னார்.


